தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்


தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்
x
தினத்தந்தி 16 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 2:49 AM IST)
t-max-icont-min-icon

தீப்பிடித்து எரிந்த சொகுசு கார்

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்தவர் மஞ்சுநாத். தொழில் அதிபரான இவர் பெங்களூருவில் குடியிருந்து வருகிறார். இவர் நேற்று காலை குடும்பத்துடன் வேப்பனப்பள்ளியில் இருந்து சொகுசு காரில் பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த கார் பேரிகை அருகே தீர்த்தம் பக்கமுள்ள செட்டு என்ற கிராமத்தின் பக்கமாக சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரில் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது.

இதை பார்த்த மஞ்சுநாத் காரை நிறுத்தினார். உடனே அவரது குடும்பத்தினர் கீழே இறங்கினார்கள். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. அனைவரும் கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். என்ஜினீல் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story