போலி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்வதை தடுக்க விழிப்புணர்வு ஊர்வலம் மாணவிகள் பங்கேற்பு
நாமக்கல்லில் போலி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்வதை தடுக்க வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் போலி நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யாமல் தடுக்க வேண்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இருந்து இந்த ஊர்வலம் தொடங்கியது. இதனை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் கவிஞர் ராமலிங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவிகள் 200–க்கும் மேற்பட்டவர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி சென்றனர். கல்லூரி முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை, மணிக்கூண்டு, போலீஸ் நிலையம், திருச்சி சாலை வழியாக மீண்டும் கல்லூரியை வந்தடைந்தது.
பரிசுசீட்டு திட்டத்திற்கு தடை
ஊர்வலத்தில் சென்ற மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். அதில் பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கி சாரா நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும்போது, அந்த நிதி நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? டெபாசிட் மீது அந்த நிறுவனம் அளிக்கும் வட்டி 12.5 சதவீதத்திற்கும் கூடுதலாக இல்லாமல் இருக்கிறதா? டெபாசிட்டுக்கான அதிகபட்ச முதிர்வு காலம் 5 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கிறதா? முதலீடு செய்யும் பணத்திற்கு முறையான ரசீது வழங்கப்படுகிறதா ? என்பதை கவனிக்க வேண்டும்.
பரிசு சீட்டு மற்றும் பணசுழற்சி திட்டங்கள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதுபோன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என்பது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்று இருந்தன.
இறுதியாக போலி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது. இதில் பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் கல்லூரி பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.

Next Story