நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சேலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்


நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சேலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சேலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆர்ப்பாட்டம்

சேலம்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர மாவட்ட மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாராயணன், கோவிந்தராஜூ, கோபால்சாமி, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் வேலாயுதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலநது கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோ‌ஷங்களை எழுப்பினர். மேலும், பொதுமக்களை பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Next Story