நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம்


நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டம்

நாகர்கோவில்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மீது பா.ஜனதா அவதூறு பரப்புவதாகவும் அதனைக் கண்டித்தும், மத்திய பிரதேச மாநில ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வன்முறையைத் தூண்டும் பேச்சை கண்டித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் குமரி மாவட்டக்குழு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று கண்டன தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், நிர்வாகிகள் செல்லசுவாமி, அந்தோணி, செல்லப்பன், உஷாபாசி, மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது தர்ணா போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story