தகவல் நிலையமாக செயல்படும் பொருட்கள்


தகவல் நிலையமாக செயல்படும் பொருட்கள்
x
தினத்தந்தி 16 March 2017 7:00 PM IST (Updated: 16 March 2017 12:20 PM IST)
t-max-icont-min-icon

வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், பொது இடங்களில் உள்ள சாதாரண பொருட்களை, வானொலி நிலையங்கள்போல தகவல் மையங்களாக பயன்படுத்தும் நுட்பத்தை உருவாக்கி உள்ளார்கள்.

இதன்மூலம் மின்சாரம் இல்லாமலும், சிக்னல் கோபுரங்கள் இல்லாமலும் தகவல் பரிமாற்றத்தை சாத்தியமாக்கலாம்.

ஒலிஅலைகள், துகள்களின் சிதறல் மற்றும் எதிரொலித்தலை மையமாக வைத்து இந்த தொழில்நுட்பம் செயல்படுகிறது. குறியீடுகளாக மாற்றப்பட்ட முக்கியத் தகவல்கள் பொது இடங்களில் உள்ள போஸ்டர்கள், கம்பங்கள் போன்ற பொருட்களில் பதிவு செய்து வைக்கப்படும். இவற்றை புற ஊதாக் கதிர்களை வெளியிடும் பொருட்கள் நெருங்கி வரும்போது தன்னுள் பொதிந்துள்ள தகவல்களை அவற்றுக்கு பரிமாற்றம் செய்துவிடும். உதாரணமாக அருகே ஏ.டி.எம். மையம் உள்ளது என்ற தகவலை பதிவு செய்து வைத்திருந்தால், நாம் செல்போனுடன் அருகில் போய் நின்றாலே அந்த தகவல் நமது செல்போனுக்கு கடத்தப்படும்.

எதிர்காலத்தில் செல்போன்கள் மட்டுமல்லாது, டிசர்ட் போன்ற உடைகள், கார்கள் என அனைத்திற்கும் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தகவல்கள் கடத்தப்படும். அதிலிருந்து தகவல்களை திரட்டி தெரிந்துகொள்ள முடியும். இதனால் செல்போன் இன்றியும் தகவல் தொடர்பு சாத்தியமாகும். ஆனாலும் இதற்கு சிக்னல் கோபுரங்களோ, மின்வசதியோ தேவைப்படாது என்பது அதிசயமான உண்மை. வைபை, புளூடூத் போன்ற இந்த புதுமையான தொழில்நுட்பத்தை உருவாக்கிய குழுவில் இந்திய மாணவர் களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story