பல் வலிக்கு பலே தீர்வு
பயங்கர அவதி தரக்கூடியது பல் வலி. சிலருக்கு வலி தீர்ந்தாலும் கூச்சம் போவதில்லை. பல்வலியை தீர்ப்பதற்கு ஈறில் ஊசிபோடுவதுடன் மாத்திரை தருவார்கள்.
பின்னரும் வேதனை நீடித்தால் பல் பிடுங்குதல் உள்பட பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். தற்போது ஊசிபோடும் முறைக்கு மாற்றாக நுண்ஊசிகளை கொண்ட ‘மைக்ரோநீடில்’ பட்டைகள் வழக்கத்திற்கு வந்துள்ளன. இது வலி ஏற்படுத்தாமல் உடலில் உள்ள நுண் துளைகள் வழியே மருந்துகளை வினியோகம் செய்கின்றன. இது போலவே பல் வலிக்கு தாடை, ஈறில் ஊசி குத்தாமல் மருந்தை வினியோகிக்கும் புதிய குப்பி வந்துள்ளது.
டியூப் மாத்திரை போல இருக்கும் இதன் பின்புறத்தில் சிறிய ரப்பர் காற்றறை உள்ளது. இதை அழுத்தினால் அதி வேகத்துடன் மருந்து பீய்ச்சி அடிக்கப்படும். வலி உள்ள பல்லின் மீது இந்த மருந்து குப்பியின் உதவியால் மருந்தை தெளித்துவிட்டால் போதும். ஊசி வேதனையில்லாமலே பல் வலியும் கட்டுப்படுத்தப்படும். மருத்துவ உதவியாளர் இன்றி, நாமாகவே இந்த வேலையை செய்து பல் வலியை தற்காலிகமாக போக்கலாம். மியூகோஜெட் (MucoJet) எனப்படும் இந்த மருந்து செலுத்தும் குப்பியை பெர்கிலியில் செயல்படும் கலிபோர்னியா பல்கலைக்கழக கிளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்துக்குப்பியை பல்வேறு மருந்துகளை செலுத்துவதற்கும் பயன்படுத்த முயற்சிகள் நடக்கிறது.

Next Story