வீடியோவில் பொருட்களை தேடலாம்
கணினி தொழில்நுட்பத்தில் கோப்புகளை தேட ‘சர்ச்’ வசதி மிகவும் உபயோகமாக உள்ளது.
புகைப்படங்களிலும் கூட சில உருவங்களை/ முக அடையாளங்களை வைத்து, இது இவருடைய உருவம் என்பதை கண்டுபிடிக்கும் வசதி இருக்கிறது.
இதுபோலவே ஒரு வீடியோவில் இடம் பெறும் பொருட்களையும் தேடி கண்டுபிடிக்கும் வசதியை கூகுள் உருவாக்கிவிட்டது. கூகுளின் செயற்கை அறிவு தொழில்நுட்ப பிரிவினர் இதற்கான முயற்சியில் வெற்றி பெற்று உள்ளனர்.
ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வீடியோக் காட்சியில், நமக்கு அவசியமான ஒரு பொருளை தேடிக் கண்டுபிடிக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக இருக்கும். உதாரணமாக ஒரு சிறுவன் கடற்கரையில் நாய்க்குட்டியை விரட்டிக் கொண்டு ஓடும் காட்சியை பார்க்கிறோம் என்றால், அங்கே கடற்கரையில் நண்டு, ஆமை, கிளிஞ்சல்கள் ஏதேனும் ஒதுங்கியிருக்கிறதா? என்பதை கோப்புகளைத் தேடுவது போலவே தேடி கண்டுபிடிக்க முடியும். நாம் தேடும் பொருட்கள் இருந்தால், சரியாக வீடியோ காட்சி அந்த இடத்தில் நிறுத்தப்பட்டு குறியிட்டு காண்பிக்கப்படும்.
கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு விதமான விஷயங்களில் மிக எளிதாக துப்பு துலக்கவும் இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்று நம்பலாம். ஆம், நீண்ட நேரம் பதிவாகி உள்ள வீடியோ காட்சிகளில் சம்பந்தப்பட்ட இடத்தை உடனடியாக கண்டறிய இதை பயன்படுத்த முடியும்.
‘கூகுள் கிளவுட் வீடியோ இன்டலிஜென்ஸ்’ எனப் படும் இந்தத் தொழில்நுட்பம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளது.

Next Story