மானாமதுரையில் ரெயில்வே தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மானாமதுரையில் ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கம்
மானாமதுரை,
மானாமதுரையில் ரெயில் நிலையம் முன்பு ரெயில்வே தொழிற்சங்கம்(எஸ்.ஆர்.எம்.யூ.) சார்பில் அகில இந்திய எதிர்ப்பு நாளையொட்டி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கிளை தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சங்கர்தாஸ் முன்னிலை வகித்தார். உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மத்திய அமைச்சரவை குழு உறுதியளித்த படி குறைந்தபட்ச சம்பள கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தண்டவாள பராமரிப்பாளர்களுக்கு சதவீத அடிப்படையில் பதவி உயர்வு உத்தரவை வெளியிட வேண்டும், அனைத்து மேற்பார்வையாளர்களுக்கும் அடிப்படை சம்பளத்திற்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், ரெயில்வே தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளை பறிக்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர். முடிவில் உதவி தலைவர் இருளப்பன் நன்றி கூறினார்.