அரிசி ஆலை உரிமையாளரிடம் ரூ.4½ லட்சம் மோசடி ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு
புதுக்கோட்டை ஆலங்குடி ரோட்டில் வசித்து வருபவர் நடராஜன்.
காரைக்குடி,
புதுக்கோட்டை ஆலங்குடி ரோட்டில் வசித்து வருபவர் நடராஜன். இவர் அப்பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரும், காரைக்குடி அருகே உள்ள ஆத்தங்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுப்பிரமணியன் என்பவரும் நண்பர்கள். சுப்பிரமணியன் தனது சொந்த தேவைக்காக நடராஜனிடம் ரூ.4½ லட்சம் கடனாக வாங்கினாராம். ஆனால் அதன்பின்னர் குறிப்பிட்ட தேதியில் சுப்பிரமணியன் பணத்தை திருப்பி கொடுக்கவில்லையாம். நடராஜன் பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை.
இதனால் சுப்பிரமணியன் பண மோசடி செய்துவிட்டதாக நடராஜன் ஐகோ£ட்டில் புகார் மனுதாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனையடுத்து சுப்பிரமணியன் மீது குன்றக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story