காரிமங்கலம் அருகே மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை


காரிமங்கலம் அருகே மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 17 March 2017 3:15 AM IST (Updated: 16 March 2017 6:58 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே உள்ள கேத்தனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 70).

காரிமங்கலம்,

காரிமங்கலம் அருகே உள்ள கேத்தனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் ராஜம்மாள் (வயது 70). இவர் தனது பேத்தி நந்தினி வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டில் வி‌ஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதையறிந்த நந்தினி மீட்டு சிகிச்சைக்காக அனுமந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜம்மாள் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story