ஓசூர் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 4 காட்டு யானைகள்


ஓசூர் அருகே விவசாய பயிர்களை நாசம் செய்த 4 காட்டு யானைகள்
x
தினத்தந்தி 17 March 2017 3:45 AM IST (Updated: 16 March 2017 7:04 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே போடூர்பள்ளம் காட்டில் முகாமிட்டு 4 காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம்

ஓசூர்,

ஓசூர் அருகே போடூர்பள்ளம் காட்டில் முகாமிட்டு 4 காட்டு யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தன. இந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு சென்றன. இந்த நிலையில் இரவு நேரங்களில் உணவுக்காக இந்த யானைகள் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்கின்றன.

நேற்று முன்தினம் 4 காட்டு யானைகளும் செட்டிப்பள்ளி அருகே உள்ள கொண்டப்பள்ளி கிராமத்திற்கு சென்றன. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி, தக்காளி, வாழை உள்ளிட்ட 3 ஏக்கர் பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. பின்னர் யானைகள் மீண்டும் காட்டிற்கு சென்றன.

விவசாய பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருந்ததை கண்டு விவசாயிகள் கலையடைந்தனர். யானைகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இந்த 4 காட்டு யானைகளையும் அடர்ந்த வனப்பகுதிக்கு அனுப்பிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story