போலி நிதி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்


போலி நிதி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 17 March 2017 2:30 AM IST (Updated: 16 March 2017 7:48 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி நிதி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் திருவண்ணாமலை அரசு தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் போலி நிதி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள் தலைமை தாங்கினார். உதவி பயிற்சியாளர்கள் கண்ணன், ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டு போலி நிதி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

ஊர்வலத்தில் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் (செய்யாறு) சரவணன், வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை, சப்–இன்ஸ்பெக்டர் மனோன்மணி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் அசோகன், செல்வகுமார், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் போலி நிதி நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் போலி நிதி நிறுவனங்களை எவ்வாறு கண்டறிவது? முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை பாதுகாப்பான முறையில் எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் போலி நிதி நிறுவனங்கள் குறித்து 98405 84729 என்ற செல்போன் எண்ணிலும், 044–64500155 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் அளிக்கலாம் என்று கூறப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story