பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையில் மாற்றம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதன்படி அகில இந்திய தபால் ஊழியர்கள் சங்கத்தினரும் திருப்பூரில் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் கோட்டத்தில் 3 தலைமை தபால் நிலையங்களும், 62 கிளை தபால் நிலையங்களும், 349 கிராமபுற தபால் நிலையங்களும் உள்ளன. இவற்றில் சுமார் 700 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். 2 தலைமை தபால் நிலையங்களும், 5 கிளை தபால் நிலையங்களும் முற்றிலும் செயல்படவில்லை. கிராமபுற தபால் நிலையங்கள் முழுமையாக செயல்பட்டன. திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் தபால் வில்லைகள் (ஸ்டாம்புகள்) விற்பனை, பதிவு தபால் ஆகிய பிரிவுகள் செயல்பட்டன. ஆனாலும் வேலைநிறுத்தத்தால் தபால்கள் உரிய நேரத்தில் பட்டுவாடா ஆகாது என்பதால் பொது மக்கள் யாரும் வரலில்லை. இதனால் பெரும்பாலான பணிகள் பாதிக்கப்பட்டது.
வருமானவரித்துறையினர்இது போல திருப்பூர் ரெயில்வே தபால் நிலையத்தில் (ஆர்.எம்.எஸ்.) ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இதனால் ரெயில் மூலம் கொண்டு செல்லப்படும் பொருட்கள், தபால்கள் அனைத்தும் தேக்கமடைந்தன. அங்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
வருமானவரித்துறை, சுங்கம் மற்றும் கலால் வரித்துறையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலக ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் துறை சம்பந்தமான அனைத்து வேலைகளும் முடங்கின. கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மேலும் எங்கள் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.