ஆண்டிப்பட்டி அருகே உள்ள கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் 13 நாட்களுக்கு பின்னர் பணிக்கு திரும்பினர்


ஆண்டிப்பட்டி அருகே உள்ள கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் 13 நாட்களுக்கு பின்னர் பணிக்கு திரும்பினர்
x
தினத்தந்தி 17 March 2017 4:00 AM IST (Updated: 16 March 2017 10:11 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆண்டிப்பட்டி,

போராட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கில் செயல்படும் அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்கள் 500 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் தற்காலிக பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கேட்டு கடந்த 3–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

பின்னர் ஆலைக்கு பூட்டு போடும் போராட்டம், சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். இதையொட்டி ஆலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இந்நிலையில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில், மாநில தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

வாபஸ்

இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தகட்டமாக வருகிற 28–ந்தேதி அமைச்சர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி நூற்பாலை பணியாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து 13 நாட்களுக்கு பின்னர் தொழிலாளர்கள் நேற்று பணிக்கு திரும்பினர். ஆலையில் 2 வாரங்களுக்கு பின்னர் மீண்டும் உற்பத்தி தொடங்கியது.


Next Story