ஊரக வளர்ச்சித்துறையினருக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறையினருக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 3:45 AM IST (Updated: 16 March 2017 10:17 PM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி

பழனி,

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14–ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவித்து, அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பழனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பழனி வட்ட கிளைத்தலைவர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். செயலாளர் ரமேஷ் வரவேற்றார். பொருளாளர் நாகராஜ் முன்னிலை வகித்தார். வருவாய் அலுவலர்கள் சங்கம் சார்பில் ரவிக்குமார், சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் இளங்கோ ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story