3–வது நாளாக போராட்டம் நீடிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் தர்ணா


3–வது நாளாக போராட்டம் நீடிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் தர்ணா
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 16 March 2017 11:55 PM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சித்துறையினரின் வேலை நிறுத்த போராட்டம்

திண்டுக்கல்,

கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர், கடந்த 14–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3–வது நாளாக அவர்களின் போராட்டம் நீடித்தது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை.

நேற்று காலையில் கலெக்டர் அலுவலகத்தில் அவர்கள் திரண்டனர். பின்னர் அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் வீரகடம்பன்கோபு முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

20 அம்ச கோரிக்கை

இந்த போராட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது, தேர்தலுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உதவி இயக்குனர், இணை இயக்குனர், கூடுதல் இயக்குனர் பதவியில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். கடந்த காலங்களில் நடந்த வேலை நிறுத்த போராட்ட நாட்களை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த போராட்டத்தில் ஏராளமான ஆண் மற்றும் பெண் ஊழியர் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். காலையில் தொடங்கிய தர்ணா போராட்டம் மாலை வரை நீடித்தது. அடுத்த கட்டமாக, இன்று (வெள்ளிக்கிழமை) மறியல் போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள். ஊரக வளர்ச்சித்துறையினரின் தொடர் போராட்டம் எதிரொலியாக, அனைத்து ஊராட்சிகளிலும் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.


Next Story