மாணவர் சாவுக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மாணவர் சாவுக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 10:22 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை,

கோவை மாவட்ட முற்போக்கு மாணவர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் கோவை மணி தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர்கள் கலைச்செல்வன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் இலக்கியன், மண்டல செயலாளர் சு.சி.கலையரசன், தொகுதி செயலாளர் ம.வி.பாலசிங்கம், துணை செயலாளர் கோவை குரு, பொருளாளர் சை.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த மாணவர் முத்து கிருஷ்ணனின் சாவுக்கு சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதே கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்டு, மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பேரவையினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story