கோவை மாவட்டத்தில் அட்டை பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் தினமும் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு
கோவை மாவட்டத்தில்tt நேற்று முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
கோவை,
உற்பத்தி நிறுத்தம்கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 400 அட்டைபெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளை நம்பி 1¼ லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அட்டைபெட்டி உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளான காகிதத்தின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருவதாலும், முன்னறிவிப்பு இன்றி திடீரென்று காகிதத்தின் விலை உயர்த்தப்படுவதாலும் அட்டைபெட்டி தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 16–ந்தேதி முதல் வருகிற 19–ந்தேதிவரை 4 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அட்டை பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராமசாமி அறிவித்து இருந்தார்.
இதன்படி கோவை மாவட்டத்தில் நேற்று 200–க்கும் மேலான அட்டைபெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொழிலாளர்கள் பணிக்கு அழைக்கப்படவில்லை.
தினமும் ரூ.2 கோடி வர்த்தகம்அட்டை பெட்டி தொழிற்சாலைகள் சங்க முன்னாள் தலைவர் சதீஷ்மோகன் கூறியதாவது:–
அட்டைப்பெட்டி தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் மண்டல அளவில் தினமும் ரூ.5 கோடி அளவுக்கும், கோவை மாவட்டத்தில் ரூ.2 கோடி அளவுக்கும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. காகித தொழிற்சாலைகளில் இருந்து தினமும் 1000 டன் காகிதம் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. காகித தொழிற்சாலைகள் அடிக்கடி காகித விலையை உயர்த்தி வருவதால் இந்த தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் வேறு வழியின்றி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அட்டைபெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி உள்ளதால், அதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் 4 நாட்களுக்கு வேலைக்கு வரமுடியாத நிலையும், சம்பள இழப்பும் ஏற்பட்டுள்ளது.