கலிங்கப்பட்டியில் வைகோ தம்பி மகன் திருமண விழா முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து


கலிங்கப்பட்டியில் வைகோ தம்பி மகன் திருமண விழா முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 17 March 2017 3:00 AM IST (Updated: 17 March 2017 12:27 AM IST)
t-max-icont-min-icon

கலிங்கப்பட்டியில், வைகோ தம்பி மகன் திருமண விழா நேற்று நடந்தது. திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நெல்லை,

கலிங்கப்பட்டியில், வைகோ தம்பி மகன் திருமண விழா நேற்று நடந்தது. திருமண விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

திருமண விழா

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தம்பியும், கலிங்கப்பட்டி பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான ரவிச்சந்திரன்–சாந்தி ஆகியோரது புதல்வன் மகேந்திர வையாபுரிக்கும், ரெங்கப்பநாயக்கன்பட்டி போஜராஜன்–கீதா ஆகியோரது மகள் ப்ரீதி ஆகியோருக்கும் திருமணம் கலிங்கப்பட்டியில் வையாபுரி மாரியம்மாள் அரங்கத்தில் நேற்று நடந்தது.

திருமண விழாவுக்கு ம.தி.மு.க. அவைத்தலைவர் திருப்பூர் துரைச்சாமி தலைமை தாங்கினார். டி.எல்.மகாராஜன் வரவேற்பு பாடலை பாடினார். திருமணத்தில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு ரவிச்சந்திரன், துரை வையாபுரி, ஜெகதீசன், போஜராஜன், சூரியநாராயணன், ராஜா வையாபுரி, இந்திரஜித் வையாபுரி ஆகியோர் பொன்னாடை, மலர் மாலை அணிவித்தனர்.

முக்கிய பிரமுகர்கள்

திருமண விழாவில் மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன், பூண்டி வாண்டையார், மலேசியா பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் ராம்ஜெத்மலானி, முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்ஹா, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், தொழில் அதிபர்கள் ஏ.சி. முத்தையா, கருமுத்து கண்ணன், வி.ஜி.பி. சந்தோ‌ஷம், வி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் விசுவநாதன், நடிகர் சிவகுமார். தமிழருவிமணியன், தமிழக அரசியல் பத்திரிகை நிறுவனர் சுந்தரராமன், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தீக்கதிர் ஆசிரியர் பெருமாள், ஓவியர் வீரசந்தானம், பி.டி.அரசகுமார், ஐ.ஏ.எஸ். அதிகாரி வரதராஜன், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சோ.அய்யர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் தொழில் அதிபர் பழனி பெரியசாமி, முன்னாள் டி.ஜி.பி.அலெக்சாண்டர், முன்னாள் ஐ.ஜி.கண்ணப்பன், புதுச்சேரி தினமலர் நிர்வாகி வெங்கட்ராமன், ம.தி.மு.க. அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் கல்லத்தியான், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், நிஜாம் மற்றும் ம.தி.மு.க. மாநில, மாவட்ட, நகர, கிராம, கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வைகோ நன்றி

திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை செந்தில் அதிபன் தொகுத்து வழங்கினார்.

முன்னதாக மதுரை தினமலர் நிர்வாகி ராமசுப்பு, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி மற்றும் பிரமுகர்கள் சிலர் வைகோ இல்லத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story