சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.65 கோடியே 65 லட்சம் நிவாரணம் கலெக்டர் சம்பத் தகவல்
சேலம் மாவட்டத்தில் வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு ரூ.65 கோடியே 65 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது
சேலம்,
தமிழகத்தில் பருவமழை பொய்த்த காரணத்தினால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை யில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணத் தொகை கணக்கீட்டு அத்தொகை மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் தாலுகாவில் வேளாண்மைத்துறையின் சார்பில் 1,708 விவசாயிகளுக்கு ரூ.61 லட்சத்து 39 ஆயிரத்து 854 தொகையும், தோட்டக்கலை துறையின் சார்பில் 1,146 விவசாயிகளுக்கு ரூ.61 லட்சத்து 47 ஆயிரத்து 238 தொகையும், பட்டுவளர்ச்சித் துறையின் சார்பில் 15 விவசாயிகளுக்கு ரூ.53 ஆயிரத்து 278 என மொத்தம் 2,869 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 370 வழங்கப்பட்டு வருகிறது.
இதர தாலுகாவில்அதேபோல், சேலம் மேற்கு தாலுகாவில் 1,731 விவசாயிகளுக்கு ரூ.49 லட்சத்து 1 ஆயிரத்து 562–ம், சேலம் தெற்கு தாலுகாவில் 2,551 விவசாயிகளுக்கு ரூ.96 லட்சத்து 37 ஆயிரத்து 62–ம், ஏற்காடு தாலுகாவில் 136 விவசாயிகளுக்கு ரூ.3 லட்சத்து 94 ஆயிரத்து 290–ம், வாழப்பாடி தாலுகாவில் 12,809 விவசாயிகளுக்கு ரூ.4 கோடியே 68 லட்சத்து 33 ஆயிரத்து 86–ம், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் 14,426 விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 50 லட்சத்து 18 ஆயிரத்து 673–ம், ஆத்தூர் தாலுகாவில் 24,269 விவசாயிகளுக்கு ரூ.22 கோடியே 35 லட்சத்து 38 ஆயிரத்து 156–ம், கெங்கவல்லி தாலுகாவில் 17,761 விவசாயிகளுக்கு ரூ.9 கோடியே 74 லட்சத்து 29 ஆயிரத்து 585–ம், ஓமலூர் தாலுகாவில் 13,294 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 52 லட்சத்து 71 ஆயிரத்து 358–ம் வழங்கப்பட்டு வருகிறது.
காடையாம்பட்டியில் தாலுகாவில் 6,411 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 16 லட்சத்து 12 ஆயிரத்து 481–ம், மேட்டூர் தாலுகாவில் 21,835 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 72 லட்சத்து 41 ஆயிரத்து 327–ம், எடப்பாடி தாலுகாவில் 13,047 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 85 லட்சத்து 20 ஆயிரத்து 755–ம், சங்ககிரி தாலுகாவில் 10,133 விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 37 லட்சத்து 95 ஆயிரத்து 603–ம் வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.65 கோடியே 65 லட்சம்சேலம் மாவட்டம் முழுவதும் வேளாண்மைத்துறையின் மூலம் 1 லட்சத்து 10 ஆயிரத்து 558 விவசாயிகளுக்கு ரூ.50 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 769 தொகையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 30 ஆயிரத்து 556 விவசாயிகளுக்கு ரூ.15 கோடியே 27 லட்சத்து 48 ஆயிரத்து 812 தொகையும், பட்டுவளர்ச்சித்துறையின் மூலம் 148 விவசாயிகளுக்கு ரூ.4 லட்சத்து 85 ஆயிரத்து 770 தொகையும் என ஆக மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 272 விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.65 கோடியே 65 லட்சத்து 34 ஆயிரத்து 351 தொகை வழங்கப்பட்டு வருகிறது.
விவசாயிகள் எவ்வித சிரமமும் இல்லாமல் வறட்சி நிவாரணத்தொகை பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களின் வங்கி கணக்கிலேயே வறட்சி நிவாரண தொகை செலுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சம்பத் தெரிவித்துள்ளார்.