மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ–மாணவிகள் சாலை மறியல்
மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ–மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்,
மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவ–மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சியில் அரசு உயர்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. அங்கு எஸ்.எஸ்.எல்.சி. படித்து வரும் மாணவ– மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுவதற்கு வீரசிகாமணியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகின்றனர்.
தேர்வு எழுத சென்ற மாணவர்கள் 6 பேரை வடநத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த மாணவர்கள் லேசான காயம் அடைந்ததாகவும் தெரியவருகிறது.
திடீர் மறியல்இந்தநிலையில் மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நடுவக்குறிச்சியில் பள்ளிக்கூடத்தில் மாணவ–மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவற்கு மையம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நடுவக்குறிச்சியை சேர்ந்த மாணவ–மாணவிகளும், கிராம மக்களும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேர்ந்தமரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்துசென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.