மாதவரம், ஆவடியில் 2 பெண்களிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு


மாதவரம், ஆவடியில் 2 பெண்களிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 17 March 2017 3:15 AM IST (Updated: 17 March 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் மேம்பாலம் அருகே 2 மர்மநபர்கள் 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

செங்குன்றம்,

சென்னை கொளத்தூர் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சிவராமன். இவருடைய மனைவி ஜீவலட்சுமி (வயது 38). இவர் நேற்று முன்தினம் இரவு மாத்தூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு மொபட்டில் தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மாதவரம் மேம்பாலம் அருகே வந்த போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென ஜீவலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர். மாதவரம் காவல் உதவி மையம் அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து மாதவரம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அதேபோல் ஆவடி பருத்திப்பட்டு அசோக் நிரஞ்சன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருடைய மனைவி வசந்தி (35). இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து வர மொபட்டில் சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர் வசந்தி கழுத்தில் இருந்த 3 பவுன் சங்கிலியை பறித்துச்சென்று விட்டார். இதுபற்றி ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story