பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது சட்டசபையில் பா.ஜனதா குற்றச்சாட்டு


பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது சட்டசபையில் பா.ஜனதா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 17 March 2017 2:45 AM IST (Updated: 17 March 2017 1:58 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சட்டசபையில் பா.ஜனதா குற்றம்சாட்டியது.

பெங்களூரு,

பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சட்டசபையில் பா.ஜனதா குற்றம்சாட்டியது.

அரசியல் முன்விரோதம்

கர்நாடக சட்டசபை கூட்டத்தில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பூஜ்ஜிய நேரம் தொடங்கியது. இதில் எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா பிரமுகர் வாசு கொலை செய்யப்பட்டது குறித்து பிரச்சினையை கிளப்பி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

பா.ஜனதா கட்சியை சேர்ந்த வாசு கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதே போல் அரசியல் முன்விரோதம் காரணமாக பா.ஜனதாவினர் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் பெங்களூருவில் சமீப காலமாக துப்பாக்கி சூடு சம்பவங்கள், கொலைகள் அதிகரித்துவிட்டன.

சட்டம்–ஒழுங்கு சீர்குலைவு

வாசு கொலையில் அரசியல் முன்விரோதம் உள்ளது. அவர் பொம்மச்சந்திரா புறசபை தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்தார். ஆனால் இட ஒதுக்கீடு மாறிவிட்டதால் அவரால் அந்த பதவிக்கு போட்டியிட முடியவில்லை. இதையடுத்து அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அரசு ஒதுக்கிய இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதனால் தலைவர் பதவிக்கு அவர் மீண்டும் போட்டியிடும் நிலை உருவானது.

இந்த நிலையில் வாசு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை பார்க்கும்போது அரசியலில் இருப்பவர்கள் தங்களின் பணிகளை செய்ய பயப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் சட்டம்–ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போலீசார் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெங்களூருவில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.

இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் பேசினார்.

அவை குறிப்பில் இருந்து நீக்கம்

ஜெகதீஷ் ஷெட்டர் பேசும்போது, பக்கத்து மாநிலத்தின் பெயரை குறிப்பிட்டு அதே போல் கர்நாடகத்திலும் அரசியல் கொலைகள் அதிகரித்துவிட்டதாக குறை கூறினார். அப்போது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ரமேஷ்குமார் குறுக்கிட்டு, சபையில் ஒரு மாநிலத்தின் பெயரை குறிப்பிட்டு அங்கு இதுபோல் நடக்கிறது என்று பேசுவது ஏற்புடையது அல்ல. அங்கு அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. இதை பேசும்போது மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்“ என்றார்.

மந்திரி ரமேஷ்குமாரின் இந்த கருத்தை சபாநாயகர் கே.பி.கோலிவாட்டும் ஆதரித்தார். எனவே, ஜெகதீஷ் ஷெட்டர் குறிப்பிட்ட அந்த மாநிலத்தின் பெயரை அவை குறிப்பில் இருந்து நீக்கும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். அப்போது மீண்டும் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், “காங்கிரசார் பலமுறை குஜராத் உள்பட இதர மாநிலங்களில் நடந்த செயல்களை இங்கு பேசியுள்ளனர். அப்பேது உங்களுக்கு இவ்வாறு பேசக்கூடாது என்று தெரியவில்லையா?. அரசியல் கொலைகளை தடுக்க மாநில அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும். போலீசார் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.


Next Story