திரையரங்குகளில் இளநீர் விற்பனை கட்டாயமாக்கப்படும் மேல்–சபையில் மந்திரி ரோ‌ஷன் பெய்க் தகவல்

திரையரங்குகளில் இளநீர் விற்பனை கட்டாயமாக்கப்படும் மேல்–சபையில் மந்திரி ரோ‌ஷன் பெய்க் தகவல்
x
தினத்தந்தி 17 March 2017 2:08 AM IST (Updated: 17 March 2017 2:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் பிரணேஷ், ‘‘மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

பெங்களூரு,

கர்நாடக மேல்–சபையில் நேற்று கேள்வி நேரத்தில் உறுப்பினர் பிரணேஷ், ‘‘மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது.

விவசாயிகளின் நலன் கருதி திரையரங்குகளில் இளநீர் விற்பனை செய்ய அரசு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறி கேள்வி எழுப்பினார். அதற்கு நகர வளர்ச்சித்துறை மந்திரி ரோ‌ஷன் பெய்க் பதில் அளித்து பேசுகையில் கூறியதாவது:–

கர்நாடகத்தில் மல்டிபிளக்ஸ் மற்றும் திரையரங்குகளில் இளநீர் விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவு எதுவும் இல்லை. இருந்தாலும், இந்த திரையரங்குகளில் இளநீர் விற்க அனுமதி வழங்கி அரசு சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்படும். விவசாயிகளின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இந்த சுற்றறிக்கை திரையரங்குகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், புறசபைகளில் உள்ள திரையரங்குகளில் இளநீர் விற்பனை கட்டாயமாக்கப்படும். இதுகுறித்து சுற்றறிக்கையில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு ரோ‌ஷன் பெய்க் கூறினார்.

Next Story