7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி தபால் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி தபால் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 2:36 AM IST)
t-max-icont-min-icon

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தக்கோரி கும்பகோணம், பாபநாசம் ஆகிய இடங்களில் தபால் நிலைய ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்,

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தபால்காரர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள விகிதத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் தபால் நிலைய ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி கும்பகோணம் கோட்ட தபால் நிலைய ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பெருமாள், விஜயகுமார், அய்யப்பன், வரதராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாபநாசம்

இதைப்போல பாபநாசம் தலைமை தபால் நிலையம் முன்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊழியர் சங்க மண்டல செயலாளர் இதயநாதன் தலைமை தாங்கினார். இதில் பாபநாசம் தபால் நிலைய தலைமை அதிகாரி பார்த்தசாரதி மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

வேலைநிறுத்தம் காரணமாக கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட 328 தபால் நிலையங்களில் நேற்று பணிகள் பாதிக்கப்பட்டன. 

Next Story