வேலைவாய்ப்பு முகாம்: மாணவர் அதிகபட்சமாக ரூ.33 லட்சம் சம்பளத்திற்கு தேர்வு
திருச்சி ஐ.ஐ.எம். நிறுவனத்தில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஒரு மாணவர் அதிகபட்சமாக ரூ.33 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி,
திருச்சி துவாக்குடியில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐ.ஐ.எம்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் மேலாண்மை துறை முதுநிலை படிப்புகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான வேலை வாய்ப்பு முகாம் நேற்று ஐ.ஐ.எம். வளாகத்தில் நடந்தது. இதில் தகவல் தொடர்பு துறை, சாப்ட்வேர் நிறுவனங்கள், வாகனங்கள் தயாரிப்பு துறை, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறை நிறுவனங்களில் இருந்து மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டு நேர்முக வளாக தேர்வுகளை நடத்தினார்கள்.
ரூ.33 லட்சம் சம்பளம்
இந்த தேர்வின்போது ஒரு மாணவர் அதிகபட்சமாக ஆண்டு சம்பளம் ரூ.33 லட்சம் பெறும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது கடந்த ஆண்டு தேர்வு பெற்ற அதிகபட்ச ஆண்டு சம்பளமான ரூ.23 லட்சத்து 81 ஆயிரத்தை விட 39 சதவீதம் அதிகம் ஆகும். மொத்தம் 104 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த வளாக தேர்வில் 25 பேர் கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிக சம்பளம் பெறும் வகையில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் ரூ.16 லட்சம் முதல் ரூ.21 லட்சத்து 55 ஆயிரம் வரை சம்பளம் பெறும் வகையில் தேர்வாகி உள்ளனர்.
திருச்சி ஐ.ஐ.எம். நிறுவனம் வெளியிட்டு உள்ள ஒரு செய்தி குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story