போக்குவரத்து காப்பாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும்
போக்குவரத்து காப்பாளர்கள் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பேசினார்.
திருச்சி,
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பயிற்சி முடித்த போக்குவரத்து காப்பாளர்களுக்கு (டிராபிக் வார்டன்) பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் கலந்து கொண்டு 76 போக்குவரத்து காப்பாளர்களுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
போக்குவரத்து காப்பாளர்கள் வேலை நேரம் தவிர மற்ற நேரம் சீருடை அணியக்கூடாது. போக்குவரத்து காவலர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும். உங்களில் யாராவது வேறு எண்ணத்துடன் வந்திருந்தால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பான பணி
சில இடங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீசார் தவறான செயல்களில் ஈடுபட்டதால் அந்த அமைப்பையே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தமிழகத்தில் ஊர்க்காவல் படையினர் சிறப்பாக செயல்படுவது போல் உங்களது பணியும் சிறப்பாக இருக்க வேண்டும். உங்களது நடத்தையை தமிழகமே புகழ்வது போல் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி மாநகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனர் பிரபாகரன், உதவி போலீஸ் கமிஷனர்கள் கபிலன், விக்னேஸ்வரன், முருகேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். தொடக்கத்தில் போக்குவரத்து காப்பாளர் அகஸ்டின் ஆல்பி வரவேற்று பேசினார். முடிவில் முருகையன் நன்றி கூறினார்.

Next Story