திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன
ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தினால் திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தலைமை தபால் நிலையத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.
திருச்சி,
குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பதவி உயர்வு மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், வீட்டுவசதி அலவன்சை 1-1-2016 முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும், 3 மத்திய மந்திரிகள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
இந்த போராட்டத்தின் காரணமாக திருச்சியில் மத்திய வருமான வரித்துறை, கலால் மற்றும் சுங்க இலாகா, மத்திய புள்ளியியல் துறை, மத்திய சேவை வரி அலுவலகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. மத்திய வருமான வரித்துறை அலுவலகத்தின் பிரதான கேட் மூடப்பட்டு இருந்தது. ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
தலைமை தபால் நிலையம்
திருச்சி தலைமை தபால் நிலையத்தின் சேமிப்பு கணக்கு பிரிவு, நீண்ட கால சேமிப்பு பத்திரங்கள் விற்பனை பிரிவில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த பகுதியில் பணிகள் பாதிக்கப்பட்டன. சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்த வந்தவர்கள், நீண்ட கால சேமிப்பு பத்திரங்கள் வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள். அதே நேரத்தில் தபால் தலைகள் விற்பனை பிரிவு, விரைவு தபால் உள்ளிட்ட தபால் அனுப்பும் பிரிவு, மணியார்டர் அனுப்பும் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கின. தலைமை தபால் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் முதல்நாளே பணம் நிரப்பி வைக்கப்பட்டது. அதனால் அங்கு பணிகள் பாதிக்கப்படவில்லை என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் தபால் ஊழியர்கள், ஆர்.எம்.எஸ். மற்றும் ஜி.டி.எஸ். ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள், ஓய்வு பெற்ற தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இணைப்பு குழு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர்கள் கோவிந்தராஜ், மருதநாயகம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Next Story