பாப்பக்காப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
பாப்பக்காப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
தோகைமலை,
கரூர் மாவட்டம் அய்யர்மலை அருகே உள்ள பாப்பக்காப்பட்டியில் சுமார் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதத்தில் அப்பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காவிரி கூட்டுக்குடிநீர் சரிவர வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.
சாலை மறியல்
இதுகுறித்து பலமுறை தோகைமலை ஒன்றிய அலுவலகம் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடிநீர் வழங்க கோரி பாப்பக்காப்பட்டி மகா மாரியம்மன் கோவில் அருகே இரும்பூதிப்பட்டி- மைலம்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், கிருஷ்ணராயபுரம் தாசில்தார் முருகேசன், வருவாய் ஆய்வாளர் இந்துமதி, கிராம நிர்வாக அலுவலர் சேதுபதி, மணப்பாறை கூட்டுக்குடிநீர் திட்ட உதவி செயற்பொறியாளர் சுந்தர்சிங்பால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், அய்யர்மலையில் இருந்து பாப்பக்காப்பட்டிக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாய்களில் உள்ள பழுதுகளை ஒரு வார காலத்தில் சரி செய்து, பாப்பக்காப்பட்டி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டத்தால் இரும்பூதிப்பட்டி- மைலம்பட்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story