கரூரில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கரூரில் மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
கரூர்,
குறைந்த பட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பதவி உயர்வு உள்ளிட்ட காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், வீட்டுவசதி அலவன்சை 1-1-2016 முதல் கணக்கிட்டு வழங்கவேண்டும், 3 மத்திய மந்திரிகள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மத்திய அரசு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதனால் கரூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. அரசு ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
தலைமை தபால் நிலையம்
கரூர் தலைமை தபால் நிலையத்தின் சேமிப்பு கணக்கு பிரிவு, நீண்ட கால சேமிப்பு பத்திரங்கள் விற்பனை பிரிவில் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பணிகள் பாதிக்கப்பட்டன. சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்த வந்தவர்கள், நீண்ட கால சேமிப்பு பத்திரங்கள் வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் தபால் ஊழியர்கள், ஆர்.எம்.எஸ். மற்றும் ஜி.டி.எஸ். ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Next Story