ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:37 AM IST)
t-max-icont-min-icon

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர்,

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், சில்லறை செலவின பணியாளர்கள் பணியை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெரம்பலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் மரியதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஆனந்தன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி, தமிழ்நாடு கூட்டுறவு துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட இணை செயலாளர்கள் லட்சுமி, கவுதமன், மாவட்ட துணைத்தலைவர்கள் தயாளன், இமயவரம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அறிவழகன் நன்றி கூறினார். 

Next Story