அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை, ஜெயங்கொண்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். வட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கி னார். அமுதா, கதிர்வேல், ராதாகிருஷ்ணன், பைரவன், வீராசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். முடிவில் சாலைப்பணியாளர்கள் சங்க வட்ட தலைவர் ராஜகோபால் நன்றி கூறினார். இதேபோல் ஜெயங்கொண்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Next Story