விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா


விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
x
தினத்தந்தி 17 March 2017 4:00 AM IST (Updated: 17 March 2017 2:38 AM IST)
t-max-icont-min-icon

தா.பழூர் அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

தா.பழூர்,

விநாயகர் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல்வேறு விரத தினங்கள் இருந்தாலும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதமிருந்து மாலை நேரத்தில் விநாயகர் பெருமானை வழிபட்டால் சங்கடங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அரசமரத்தடி விநாயகருக்கு மஞ்சள், சந்தனம், களபம், விபூதி, பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அருகம்புல் மற்றும் பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தா.பழூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தா.பழூர் பகுதியில் உள்ள பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

Next Story