ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மண் சட்டி ஏந்தி நூதன போராட்டம்
ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மண் சட்டி ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் 60 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து ஓய்வூதியத்தை உடனடியாக வழங்கக்கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போக்குவரத்து கழக அதிகாரிகள் ஓய்வூதியம் விரைவில் வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தனர்.
அதன்படி ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நேற்று கும்பகோணத்தில் கையில் மண்சட்டியுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது அரசு பஸ்களில் பயணம் செய்தவர்கள், கார்களில் சென்ற அரசியல் கட்சி பிரமுகர்களிடம் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மண் சட்டியை ஏந்தி பிச்சை கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்துக்கு ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜெயராமன், முத்துகுமாரசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் ரவி, கோவிந்தராஜ், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், செல்லதுரை, சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டம் தொடரும்
போராட்டம் குறித்து ஓய்வு பெற்றோர் நலச்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது:- கடந்த மாதம் 21-ந் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், ஓய்வூதிய தொகை மார்ச் 15-ந் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி ஓய்வூதிய தொகையை தரவில்லை. இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். கோரிக்கைக்கு தீர்வு வரும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story