மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் சார்பில் தலைமை செயலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக்கோரி கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பினர் சார்பில் தலைமை செயலகம் அருகே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரமாக மத்திய அரசு வழங்க வேண்டும், புதுவை மாநில அரசு 7–வது ஊதியக்குழு சம்பளத்தை நகராட்சி, கொம்யூன், பஞ்சாயத்து, தன்னாட்சி பொதுத்துறை நிறுவனங்களுக்கு காலங்கடத்தாமல் அமலாக்க வேண்டும், தினக்கூலி, தொகுப்பூதியம், ரொட்டிப்பால், மதிய உணவு, பெண் நடத்துனர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலியான பணியிடங்களை நியமன விதிப்படி ஆண்டுதோறும் நிரப்ப வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் லட்சுமணசாமி சிறப்புரையாற்றினார். இதில் மத்திய கூட்டமைப்புடன் இணைந்த பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story