புதுச்சேரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்


புதுச்சேரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 17 March 2017 4:30 AM IST (Updated: 17 March 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்களுக்கு எதிரான பரிந்துரைகளை மாற்றியமைக்கக் கோரி புதுச்சேரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளில் அரசு ஊழியர்களுக்கு எதிரான பரிந்துரைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்தது.

இதை ஏற்று புதுவை அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தை சேர்ந்தவர்கள் நேற்று வேலைநிறுத்தம் செய்து மறைமலை அடிகள் சாலையில் உள்ள சுதேசி மில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பாலமோகனன் முன்னிலை வகித்தார். தர்ணாவில் பொதுச்செயலாளர் பிரேமதாசன், நிர்வாகிகள் கிறிஸ்டோபர், புகழேந்தி, கீதா, தமிழரசி, பாக்கியவதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பணிகள் பாதிப்பு


அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, அரசு சார்பு பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளி என அனைத்து ஊழியர்களுக்கும் 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர் சம்மேளனத்தின் இணைப்பு சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவோடு நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் பேசினார்கள்.

அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.


Next Story