போதைக்கு இளைஞர்களை அடிமையாக்குவது தீவிரவாதத்துக்கு சமமானது அதிகாரி பேச்சு
போதைக்கு இளைஞர்களை அடிமையாக்குவது தீவிரவாதத்துக்கு சமமானது என்று போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
புதுச்சேரி,
போதைப்பொருள் மற்றும் போதை மருந்து தடுப்பு குறித்த கருத்தரங்கு கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் நேற்று நடந்தது. கருத்தரங்கை போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு பேசுககையில் கூறியதாவது:–
இந்தியாவில் கஞ்சா, அபின், ஹெராயின், பிரவுன்சுகர், கோகைன், ஓபியம் போன்ற போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய இளைஞர்களை சீரழிக்க பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வருகின்றனர்.
மருத்துவத்துக்கும், ஆராய்ச்சிக்கும் ஓபியம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சிலர் இதனை போதைக்காக கடத்தி விற்பனை செய்கின்றனர். போதைக்கு இளைஞர்களை அடிமையாக்குவது தீவிரவாதத்துக்கு சமமானது.
கடத்தலை தடுக்க வேண்டும்
போதைப்பொருள் கடத்தலை கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுக்கவேண்டும். போதைக்கு அடிமையானவர்களை அப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும். இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு பேசினார்.
இந்த கருத்தரங்கில் போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story