வி‌ஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு


வி‌ஷம் குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 17 March 2017 2:42 AM IST (Updated: 17 March 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள தலையா£ரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 27), லாரி டிரைவர்

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூர் அருகே உள்ள தலையா£ரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி (வயது 27), லாரி டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த மாதம் 15–ந் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து ரஜினி குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story