அஞ்சல்துறை– வருமானவரித்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தம் பணிகள் பாதிப்பு
குமரி மாவட்டத்தில் அஞ்சல்துறை– வருமானவரித்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பணிகள் பாதிக்கப்பட்டன.
நாகர்கோவில்,
1–1–2004–க்கு பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், அரசுப்பணியில் தனியார்மயம், அவுட்சோர்சிங், ஒப்பந்தமயம் ஆகியவற்றை அனுமதிக்க கூடாது, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை திருத்தியமைக்க வேண்டும், ஞாயிறு மற்றும் விடுமுறை காலங்களில் ஊழியர்களை பணிக்கு வர வற்புறுத்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும், தபால்காரர், மெயில்கார்டு, எம்.டி.எஸ். பணியிடங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக பழிவாங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் 3–ம் பிரிவு சங்கத்தினரும், எப்.என்.பி.ஓ. சங்கத்தினரும் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணிகள் பாதிப்பு
இதையொட்டி அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் 3–ம் பிரிவு சங்கத்தின் குமரி கோட்டம் சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்ட தலைவர் ஜஸ்டின் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் சுரேஷ்குமார், நிதி செயலாளர் அய்யம்பெருமாள் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். நிர்வாகிகள் சேக்மதார், ரவூப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக தபால் நிலையங்கள் மூலம் நடைபெறக்கூடிய பண பரிவர்த்தனைகள், பதிவுத்தபால் சேவை, விரைவு தபால் சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளும், அலுவலக பணிகளும் பாதிப்புக்குள்ளாகின.
மூடிக்கிடந்தன
மேலும் பல தபால் நிலையங்கள் ஊழியர்கள் இன்றி மூடிக்கிடந்தன. திறந்திருந்த தபால் நிலையங்களிலும் ஊழியர்கள் குறைவான அளவில் பணிக்கு வந்திருந்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் தபால் நிலையங்களுக்கு நேற்று வந்தவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தபிறகுதான் தங்களது சேவைகளை பெற முடிந்தது.
இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக தபால்துறை கோட்ட அதிகாரி ஒருவர் கூறும்போது, “தபால்துறையில் குமரி கோட்டத்தில் பணியாற்றும் 834 பேரில் 443 பேர் பணிக்கு வந்து விட்டனர். 391 பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்களும் திறந்திருந்தன. 78 துணை தபால் நிலையங்களில் 47 தபால் நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. 31 தபால் நிலையங்கள் பூட்டியிருந்தன. 182 கிளை தபால் நிலையங்களில் அனைத்தும் திறந்திருந்தன“ என்றார்.
ரூ.1 கோடி பாதிப்பு
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் 3–ம் பிரிவு சங்க நிதி செயலாளர் அய்யம்பெருமாள் கூறுகையில், “எங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக குமரி மாவட்டத்தில் 70–க்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் மூடிக்கிடந்தன. திறந்திருந்த தபால் நிலையங்களிலும் ஒன்றிரண்டு ஊழியர்கள் மட்டுமே பணியில் ஈடுபட்டதால் பணிகள் அனைத்தும் முடங்கிப்போய் உள்ளது. தபால் நிலையங்கள் மூலமாக நடைபெறும் பண பரிவர்த்தனை சுமார் ரூ.1 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளது“ என்றார்.
வருமானவரித்துறை
இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருமானவரித்துறை அதிகாரிகள் சங்கத்தினரும், வருமானவரித்துறை ஊழியர்கள் சங்கத்தினரும் நேற்று நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு பகுதியில் உள்ள வருமானவரித்துறை அலுவலகமும், மீட் தெருவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் வருமான வரித்துறை அலுவலக பணிகள் முழுமையாக முடங்கிப்போய் உள்ளது என வருமானவரித்துறை அதிகாரிகள் சங்கத்தலைவர் வேணுகுமார் தெரிவித்தார். இதேபோல் இந்த போராட்டத்துக்கு ஆதரவான வருங்கால வைப்பு நிதி அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட மத்திய அரசின் சில துறை ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டங்கள்
மத்திய அரசு ஊழியர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவாக தேசிய தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று மதியம் நாகர்கோவில் வாட்டர்டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட அமைப்பு செயலாளர் அலோசியஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜோசப் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். முடிவில் கிளை செயலாளர் லெட்சுமணப்பெருமாள் நன்றி கூறினார்.
இதேபோல் மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதிய அமைப்புகளின் ஒருங்கிணைப்புக்குழுவின் குமரி மாவட்டக்கிளை சார்பில் மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய பி.எஸ்.என்.எல். சங்க மாவட்ட செயலாளர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் அமைப்பு மாவட்ட செயலாளர் ராஜநாயகம் சிறப்புரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story