மாமல்லபுரத்தில் 5 ஆமைகள் செத்து கரை ஒதுங்கின


மாமல்லபுரத்தில் 5 ஆமைகள் செத்து கரை ஒதுங்கின
x
தினத்தந்தி 17 March 2017 3:09 AM IST (Updated: 17 March 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கடற்கரையில் அடிக்கடி ஆமைகள் செத்து கரை ஒதுங்குகின்றன.

மாமல்லபுரம்,

சென்னையை அடுத்த எண்ணூர் அருகே கடலில் கப்பல்கள் மோதி டீசல் கொட்டிய சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கடற்கரையில் அடிக்கடி ஆமைகள் செத்து கரை ஒதுங்குகின்றன.

இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில் வியாபாரிகள் நலச் சங்க தலைவர் ராஜசேகர் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது ஆங்காங்கே 5 ஆமைகள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. இதுகுறித்து மீனவர்களுக்கு அவர் தகவல் தெரிவித்தார். உடனே மீனவர்கள் அங்கு வந்து, இறந்த ஆமைகளை குழி தோண்டி புதைத்தனர்.

கடலில் கொட்டிய டீசல் கழிவால் கடல் வாழ் உயிரினங்கள் இறந்து வருவதாக விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர். முன்னதாக இறந்த ஆமைகளை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் சிலர் செல்போன் மூலம் படம் எடுத்து வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர். 

Next Story