மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் வருமான வரித்துறை, தபால் துறை அலுவலகங்கள் வெறிச்சோடின
மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வருமான வரித்துறை, தபால் துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
மும்பை,

வேலை நிறுத்தம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவேண்டும், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.26 ஆயிரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஊழியர்கள் பணிக்கு வராததால் மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது.
மராட்டியத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
மும்பையில் மத்திய அரசின் கீழ் செயல்படும் வருமான வரித்துறை, தபால் துறை, தபால் கணக்கு அலுவலகம், மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் உள்ளிட்ட மத்திய அரசு அலுவலகங்களில் நேற்று ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அவை வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில மத்திய அரசு துறைகளில் குறைந்த அளவில் ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
தானேயில் உள்ள தலைமை தபால் அலுவலகத்திற்கு ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இதனால் அந்த அலுவலகம் பூட்டி கிடந்தது.
தங்களது மேற்படி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆங்காங்கே உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மத்திய அரசு ஊழியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

Next Story