துலே தாக்குதல் சம்பவத்தை கண்டித்து பயிற்சி டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் மாநிலம் முழுவதும் நடக்கிறது
துலேயில் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று அரசு பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
மும்பை,
துலேயில் பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று அரசு பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
டாக்டர் மீது தாக்குதல்துலேயில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருப்பவர் ரோகன் மகாமுன்கர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் நோயாளி ஒருவரின் உறவினர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளானார். இந்த தாக்குதலில் அவரது இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு மாநிலம் முழுவதும் டாக்டர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
வேலை நிறுத்தம்இந்தநிலையில் இந்த தாக்குதலை கண்டித்து இன்று(வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து அவர்கள் மாநில மருத்துவ கல்வித்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
துலே சம்பவத்திற்கு பிறகு ஆஸ்பத்திரிகளின் பாதுகாப்பு பிரச்சினையில் அரசு நிரந்தர தீர்வு காண விரும்புகிறோம். எனவே இன்று காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரை அவசரகால, வழக்கமான மருத்துவப்பணியை புறக்கணிப்போம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பயிற்சி டாக்டர்கள் நாளை மும்பை சி.எஸ்.டி. ஆசாத் மைதானத்திலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.