ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் சார்பில் ராமநாதபுரம் போக்குவரத்து கழக பணிமனை
ராமநாதபுரம்,
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வூதியர் நலச்சங்கத்தினர் சார்பில் ராமநாதபுரம் போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் விஜயபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதந்தோறும் முதல் தேதியில் கிடைத்து வந்த ஓய்வூதியம் இதுவரை வழங்கப்படாததை கண்டித்தும், அகவிலைப்படி வழங்கப்படாததை கண்டித்தும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க பொறுப்பாளர் கோபால், பொருளாளர் அன்சாரி மற்றும் ஓய்வூதியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Next Story