தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் மரம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை


தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் மரம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 6:32 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனைக்கு

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு மற்றும் அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் 10 அடி நீளத்தில் பெரிய மரம் ஒன்று கரை ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து மீனவர்கள் உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற உளவுப்பிரிவு போலீசார், இந்த மரம் பார்வையிட்டு இலங்கை கடற்கரையோரம் உள்ள மரங்களில் இருந்து முறிந்து கடலில் விழுந்து காற்று, கடல்அலையின் வேகத்தால் இழுத்துவரப்பட்டதா அல்லது மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவு பகுதிகளில் உள்ள மரத்தில் இருந்து முறிந்து விழுந்து கரை ஒதுங்கியதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரை ஒதுங்கி கிடக்கும் மரம் பல நாட்கள் கடலில் மிதந்திருக்கலாம் என்றும் அதனால் தான் மரம் முழுவதும் பாசி, சிப்பிகள் படிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதே தனுஷ்கோடி கடற்கரையில் கடந்த சில மாதங்களுக்கு மன்பு ராட்சத தேக்குமரம் ஒன்று கடலில் மிதந்து வந்து கரை ஒதுங்கியது. அந்த மரத்தை ராமேசுவரம் சுங்கத்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story