சாத்தூர் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகையை அபேஸ் செய்த பெண் பயணிகள் அதிரடி சோதனை நடத்தி பிடித்தனர்


சாத்தூர் அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகையை அபேஸ் செய்த பெண் பயணிகள் அதிரடி சோதனை நடத்தி பிடித்தனர்
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 6:34 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகையினை அபேஸ் செய்த பெண், சக பயணிகள் அதிரடியாக சோதனை நடத்தியபோது பிடிபட்டார்.

சாத்தூர்,

ஆசிரியை

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி பிரேமா(வயது44). இவர் விருதுநகர் அருகே உள்ள வீரசோழனில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்.

சம்பவத்தன்று மாலை வகுப்பு முடிந்து சொந்த ஊருக்குச்செல்ல விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பிரேமா பஸ் ஏறியுள்ளார். அப்போது தனது 19 பவுன் நகையினை மணிபர்ஸில் வைத்திருந்தார்.

சோதனை

பஸ் சாத்தூரை நெருங்கிக்கொண்டிருந்தபோது எதேச்சையாக பர்சினை பார்த்தபோது அது மாயமாகி இருப்பதுதெரியவந்தது. உடனே சகபயணிகளிடமும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடமும் தெரிவித்தார். உடனே புற வழிச்சாலையில் பஸ் நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு பயணியிடமும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கைக்குழந்தையுடன் பஸ்சில் வந்த ஒரு பெண் மீது அனைவரது கவனமும் திரும்பியது. அவரை சூழ்ந்து சோதனை நடத்தியபோது அவர் நகையினை அபேஸ் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே நகையினை மீட்டு அந்த பெண்ணை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவரது பெயர் தேவி(35) என்பதும் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த செங்கர் என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது. அவரிடம் சாத்தூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story