மதுகுடிக்க மாமியார் பணம் கொடுக்காததால் தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை
மதுகுடிக்க மாமியார் பணம் கொடுக்காததால் சிதம்பரத்தில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சிதம்பரம்,
சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலு மகன் குமார் (வயது 36) கூலித்தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் அதிகமாக இருந்து வந்ததாக தெரிகிறது. மேலும் சரியான முறையில் வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று குமார் அதே பகுதியை சேர்ந்த தனது மாமியார் செல்வி என்பவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த குமார் வீட்டில் இருந்து மண்எண்ணெயை உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
சாவுஇதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சிதம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.