தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி யார் அவர்? போலீஸ் விசாரணை


தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி யார் அவர்? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2017 4:00 AM IST (Updated: 17 March 2017 7:53 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருக்காட்டுப்பள்ளி,

வாலிபர் பலி

தஞ்சை ரெயில் நிலையத்துக்கும், பூதலூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே சஞ்சீவிபுரத்தில் ஆளில்லா ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டின் அருகே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திகா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது பிணமாக கிடந்த வாலிபர் கட்டம் போட்ட லுங்கியும், பச்சை, வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.

போலீஸ் விசாரணை

பிணமாக கிடந்தவர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்த போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தஞ்சை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story