சேவூரில் பஞ்சாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


சேவூரில் பஞ்சாலை தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 18 March 2017 2:30 AM IST (Updated: 17 March 2017 8:27 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே சேவூரில் பஞ்சாலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணி

ஆரணி அருகே சேவூரில் பஞ்சாலை தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சாலை

ஆரணியை அடுத்த சேவூரில் உள்ள லட்சுமி சரஸ்வதி டெக்டைல்ஸ் பஞ்சாலை முன்னாள் முதல்–அமைச்சர் காமராஜர் காலத்தில் தொடங்கப்பட்டதாகும்.

இந்த பஞ்சாலையில் வடாற்காடு மாவட்ட தேசிய பஞ்சாலை தொழிலாளர் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து தொழிற்சங்க தலைவர்கள் ஜி.வெங்கடேசன், ஆர்.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் கடந்த மாதம் 21–ந் தேதி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டம்

இதில் கோரிக்கைகளை ஏற்காததால் கடந்த 2 நாட்களாக 8 மணி நேரத்திற்கு ஒரு ‘ஷிப்ட்’ வீதம் 3 ‘ஷிப்ட்’ தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் சம்பள உயர்வு, விருப்ப ஓய்வு பெறுபவர்களை ஓய்வு கொடுக்காமல் காலதாமதம் செய்வது, தொழிலாளர்கள் சலுகைகள் குறித்து கோரிக்கைகளை ஏற்கப்படாமல் இருப்பது குறித்தும், பஞ்சு வாங்காமல் தொழிலாளர்களுக்கு வேலை தராமல் இழுத்தடிப்பது குறித்தும் கோ‌ஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் ‘ஷிப்ட்’ முடிந்து வெளியே செல்பவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நிர்வாகத்தின் வெளிபுறத்திலும் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் சங்க செயலாளர் வி.யுவராஜ், துணை செயலாளர் டி.ஆறுமுகம், நிர்வாகிகள் ஏ.ஜெயக்குமார், பி.வெங்கடேசன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story