நாகை மாவட்டத்தில் 4–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது


நாகை மாவட்டத்தில் 4–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட 170 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2017 4:00 AM IST (Updated: 17 March 2017 10:21 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் 4–வது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

வேலை நிறுத்தம்

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 4–வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு சீமைக் கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட அதிக பணிச்சுமை உள்ளது. இதனால் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்கள் மக்கள் பணியாற்ற முடியவில்லை. எனவே கூடுதல் பணிச்சுமையினை குறைத்து மக்கள் பணியாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

கோ‌ஷங்கள்

20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தகுதியான அனைவருக்கும் உடனே பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். அப்போது தேர்தல் பணிக்கு மட்டும் முக்கியத்துவம் தர வேண்டும். சாலை ஆய்வாளர்களுக்கு பணிபுரிந்த ஆண்டுகளை கணக்கில் கொண்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட 170 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு தனியார் திருமணமண்டபத்தில் தங்கவைத்தனர்.


Next Story