மின்மயானம் அமைக்க எதிர்ப்பு திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்


மின்மயானம் அமைக்க எதிர்ப்பு திருத்துறைப்பூண்டியில் பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 18 March 2017 4:15 AM IST (Updated: 17 March 2017 10:23 PM IST)
t-max-icont-min-icon

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருத்துப்பூண்டியில் பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

திருத்துறைப்பூண்டி,

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மின்மயானம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் மின்மயானம் அமைக்க தமிழக அரசு ரூ.86 லட்சம் ஒதுக்கீடு செய்தது. திருத்துறைப்பூண்டி–நாகை சாலையில் மீனாட்சி வாய்க்கால் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் மின்மயானம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் மின்மயானம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்துறைப்பூண்டி மீனாட்சிவாய்க்கால் கீழத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர். உண்ணாவிரத போராட்டத்துக்கு துரைசாமி தலைமை தாங்கினார்.

போராட்டம் தொடரும்

போராட்டக்குழு செயலாளர் பாஸ்கர், திராவிடர் கழக இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவிதம்பி, முன்னாள் நகரசபை உறுப்பினர் ஸ்டீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மீனாட்சி வாய்க்கால் அருகே மின்மயானம் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் தொடரும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story